சட்டவிரோதமான முறையில் 45 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கைதானவர்களிடம் இருந்து 45 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் அவை 45 இலட்சத்து 40 ஆயிரம் ரூபா பெறுமதியுடையவை எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது.
கல்முனை பகுதியைச் சேர்ந்த ஆணொருவரும், யட்டியாந்தோட்டை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க திணைக்கள அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போது, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.










