தேர்தலை உடன் நடத்துமாறு மஹிந்த வலியுறுத்து

தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில் நிச்சயம் வெற்றி பெறுவோம். நாட்டு மக்களின் அரசியல் தீர்மானத்தை அறிய அர சாங்கம் தேர்தலை நடத்த வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்தார்.

தேசிய வளங்களை பாதுகாக்கும் அமைப்பின் தலைவர் எல்லே குணவங்ச
தேரரை நேற்று சனிக்கிழமை கொழும்பில் சந்தித்து உரையாடியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையி லேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

” நாட்டு மக்கள் பாரிய நெருக்கடிக் குள்ளாக்கப்பட்டு வாழ்க்கை சுமை அதிகரிப்பால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து அரசாங்கத் துடன் பேச்சில் ஈடுபடுவேன். மக்களுக்கு ஏதாவதொரு வழிமுறையில் நிவாரணம்
வழங்க வேண்டும்.

தேர்தலுக்கு தயாராகவே உள்ளோம். இடம்பெறவுள்ள தேசிய தேர்தல்களில்
நிச்சயம் வெற்றி பெறுவோம். நாட்டு மக்களின் அரசியல் தீர்மானத்தை அறிய அரசாங்கம் உடனடியாக தேர்தலை நடத்த வேண்டும். தேர்தலை தொடர்ந்து பிற்போடு வது ஆரோக்கியமானதல்ல.

பொதுஜன பெரமுனவின் தலைமைத்துவத்தை முன்னிலைப்படுத்தி
முரண்பாடுகள் தோற்றம் பெற்றுள்ளன என வெளியாகியுள்ள செய்தி அடிப்படையற்றது.

தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படலாம். அதில் பிரச்சினையில்லை.
தேசிய தேர்தல்களை இலக்காக கொண்டு இனி நாடளாவிய ரீதியில்
செயற்பாட்டு ரீதியிலான அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். – எனவும் மஹிந்த குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles