வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்தவர் மரணம்

வெந்நீர் கொதிகலனில் தவறி விழுந்து இந்தியர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெலிப்பன்ன பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிப்பன்ன, மீகம பிரதேசத்தில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்த  34 வயதுடைய ராஜ்பாய் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் மீகம தர்கா நகரப் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில்,   வேலை செய்து கொண்டிருந்த போது சுடுநீர் கொதிகலனுக்குள் விழுந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

Latest Articles