உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக கையளிக்கப்பட்ட வேட்பு மனுக்களை இரத்து செய்யும் முடிவுக்கு பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் தெரிவிக்கவில்லை என்று எதிரணி பிரதம கொறடாவான லக்ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் லக் ஷ்மன் கிரியல்ல கூறியவை வருமாறு,
” உள்ளாட்சிசபைத் தேர்தலுக்காக சமர்ப்பிக்கப்பட்ட வேட்பு மனுக்கள் இரத்து செய்யப்படும் என செய்திகள் வெளியாகியுள்ளன. தேர்தலை ஒத்திவைக்க ஆலோசனைக்குழு கூட்டத்தின்போது நாமும் (ஐக்கிய மக்கள் சக்தி) இணங்கியதாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகின. இக்கூட்டத்தில் எதிரணியில் எவரும் பங்கேற்கவில்லை. ஆளுங்கட்சியின் கலந்துகொண்டே முடிவை எடுத்துள்ளனர்.
தேர்தலை ஒத்திவைக்கவோ அல்லது வேட்பு மனுக்களை இரத்து செய்யவோ நாம் இணக்கப்பாடு தெரிவிக்கவில்லை. வேட்பு மனுக்களை இரத்து செய்ய நாடாளுமன்றத்தில் மூன்றிலிரண்டு பெரும்பான்மை பலமும், சர்வஜன வாக்கெடுப்பும் அவசியம். எதற்காக தேர்தலுக்கு அஞ்ச வேண்டும்?” – என்றார்.










