இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு பல நாடுகள் கோரிக்கை

சீனாவைத் தவிர வேறு பல நாடுகளும் தமது விலங்கியல் பூங்காவிற்கு இலங்கையின் செங்குரங்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர இன்று சபையில் தெரிவித்துள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதற்கான தீர்மானம் குறித்து எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் நிரோஷன் பெரேரா எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்வதை எதிர்த்து விலங்குகள் உரிமை அமைப்புகளும் ஆர்வலர்களும் மனு தாக்கல் செய்ததால், ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறினார்.

குரங்குகள், காட்டுப்பன்றிகள் மற்றும் மயில்கள் போன்ற விலங்குகளால் ஆண்டுக்கு 20 பில்லியன் விவசாய பொருட்களுக்கு இழப்பு ஏற்படுகிறது.

குரங்குகளின் ஏற்றுமதிக்கு எதிரான விலங்குகள் உரிமை அமைப்புகளுடன் பயிர் சேதத்தைத் தடுப்பதற்கான அவர்களின் முன்மொழிவுகள் குறித்து விவாதித்ததாகவும், எனினும் அவை எதுவும் நடைமுறை ரீதியான தீர்வுகளைக் எவரும் வழங்கவில்லை எனவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

Related Articles

Latest Articles