கொஸ்லாந்த வெல்லவாய வீதியில் இன்று (08) காலை மண்மேடு சரிந்து விழுந்ததில், போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சஞ்சீவ சமரகோன் கூறுகையில்,
” குறித்த வீதியில் விகாரகல சிறுவர் இல்லத்திற்கு அருகில் மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. அதனை அகற்றி வீதியை புனரமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை மற்றும் ஏனைய நிறுவனங்கள் இணைந்து செயற்பட்டு வருகின்றன.” – என்றார்.
ராமு தனராஜ்










