தலைமைப்பதவி குறித்து மஹிந்த எடுத்துள்ள முடிவு

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமைப்பதவியை இளம் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு வழங்குமாறு அக்கட்சியின் தலைவரான மஹிந்த ராஜபக்சவிடம் எம்.பிக்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர் என அரசியல் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.

இந்த இளம் தலைமைத்துவத்தை வழிநடத்துவதற்கு சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை இணைத் தலைவராக நியமிக்குமாறும், கட்சியின் ஆயுட்கால தலைவர் என்ற அந்தஸ்தில் இருந்து தாங்கள் செயற்பட வேண்டும் எனவும் அந்த எம்.பிக்கள் மஹிந்தவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கோரிக்கையை மஹிந்த ஏற்றுள்ளார் என அறியமுடிகின்றது. எனினும், மொட்டு கட்சிக்குள் தலைமைப்பதவிக்கு வருவதற்கு தகுதியான பலர் இருப்பதால் எவருக்கும் அநீதி இழைக்கப்படாத வகையிலேயே முடிவு எடுக்கப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவை நாட்டு மக்களே ஜனாதிபதி வேட்பாளராக்கினர், அதேபோல நாட்டு மக்கள் ஏற்கும் ஒருவரையே கட்சி தலைவராக்க வேண்டும் எனவும் மஹிந்த சுட்டிக்காட்டியுள்ளார்

Related Articles

Latest Articles