தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினை ஜெனிவாவில் எதிரொலிப்பு

” இலங்கை தேயிலை எனும் மங்காத நற்பெயரை ஈட்டுவதற்கு உழைப்பால் பாடுப்பட்டு தேயிலை தொழிலை வாழ்வாதார தொழிலாக முன்னெடுத்து இன்று இருநூறு வருடகால வரலாற்றை கொண்டவர்கள் இலங்கையின் மலையக மக்கள்.

இந்த மக்கள் பரம்பரையினர் இன்னும் அடையாளம் இல்லாமல் உரிமையற்றவர்களாக வாழ்ந்து வரும் நிலையில் இவர்களின் அடிப்படை மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பதை இந்த சபையில் தெரிவிக்கிறேன்.”

இவ்வாறு மலையக மக்கள் முன்னணி இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தெரிவித்தார்.

ஐ.நா. சபையின் 40 ஆவது பொது விவாத கூட்டத்தொடரில் கலந்துக்கொண்ட லெட்சுமனார் சஞ்சய் அங்கு இலங்கை மலையக மக்களின் அடிப்படை உரிமைகள் பற்றி உலகிற்கு எடுத்துரைக்கும் நோக்கில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

இலங்கையில் மலையக மக்களாகிய எமக்கு வளமான பின்னணியுடன் ஒரு வரலாறு உள்ளது. எம் மலையக மக்களின் வரலாறு 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது, இலங்கைக்கு அடையாளத்தை வழங்கியவர்கள் நாங்கள் என தெரிவித்த அவர் இலங்கை நாட்டில் பயிரிடப்பட்ட தேயிலை “சிலோன் டீ”எனும் சர்வதேச நாமத்தை எப்பொழுதும் பிரபலமாக கொண்டுள்ளது என சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்தபோதிலும் அத்தேயிலையை பாதுகாத்து, பராமரித்து நாட்டுக்கு அன்னிய செலவானியை ஈட்டித்தரும்
மலையக மக்களுக்கு அடையாளம் இல்லை என்பது வேதனைக்குரய விடயமாகும்

அத்துடன் உழைப்பு,கல்வி,
சுகாதாரம்,வீடு,காணி என அனைத்து உரிமைகளிலும் எம் மக்களுக்கு பின் வரிசையாகவே இருக்கின்றது.அதேபோல உட்கட்டமைப்பு அபிவிருத்தி வசதியும் எங்களுக்கு ஒரு கேள்விக்குறியாகவே உள்ளது என தெரிவித்துள்ளார்.

எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளில் முக்கியமானது உழைப்புக்கேற்ற ஊதியம். தொழிலாளர் சட்டத்தின்படி, ஒரு நபர் குறைந்தபட்சம் இன்றைய பெருமானாரின் படி மூன்று அமெரிக்க டொலருக்கு அதிகமாக பெற வேண்டும்.

ஆனால் இங்கு தனி நபர் அற்ற முழு குடும்பம் ஒன்று ஆறு டொலர்களையே வருமானமாக பெற்று குடும்ப சுவைக்கு ஆளாகும் நிலையில் உள்ளனர்.
இதனால் பெரும்பாலான பெண்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். எனவே இது ஒரு அடிப்படைப் பிரச்சினையாகும்.

உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்காத காரணமாக மலையக மக்கள் எதிர்கொள்ளும் பல பிரச்சனைகளையும், துயரங்களையும் சந்திக்கின்ற நிலையில் மலையகத்தில் பெரும்பாலான மாணவர்கள் வறுமை காரணமாக பள்ளியை விட்டு படிப்பினை கைவிடும் துர்பாக்கிய நிலைக்கு தள்ளிவிடப்பட்டுள்ளனர்
எனவும் சபை அமர்வில் தெரிவித்துள்ளார்.

எனவே இதற்கான தீர்வை ஐக்கிய நாடுகள் சபையூடாக வழங்க வேண்டுமென மலையக மக்கள் முன்னணியின் இளைஞரணி தலைவர் லெட்சுமனார் சஞ்சய் தனது உரையாடலில் கோரிக்கை முன் வைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles