விசேட அதிரடிப்படையினர் பயணித்த வாகனம் விபத்து – இருவர் பலி! ஐவர் காயம்!!

வவுனியா, வெளிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் கான்ஸ்டபிள்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 07 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் அதிரடிப் படையின் வீரர்கள் சிலரை ஏற்றிச்சென்ற ஜீப் வண்டியொன்று கால்நடையொன்றுடன் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.

மதவாச்சி மற்றும் குருணாகல் பகுதிகளைச் சேர்ந்த 29 மற்றும் 31 வயதுகளை உடைய இருவரே இவ்விபத்தில் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் காயமடைந்த ஏனைய STF வீரர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles