டலஸின் சகாக்கள் சஜித்துடன் சங்கமம்!

டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையவுள்ளனர் என தெரியவருகின்றது.

இதற்கான பேச்சுகள் இடம்பெற்றுவருகின்றன எனவும், தேர்தலொன்று அறிவிக்கப்பட்ட பிறகு அல்லது அதற்கு முன்னர் இவர்கள் இணையக்கூடும் எனவும் அறியமுடிகின்றது.

ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் பங்காளியாக இணையுமாறு டலஸ் அணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதற்கான பேச்சுகளும் இடம்பெற்றன.

எனினும், டலஸ் அணியில் உள்ள சிலர் சஜித் கூட்டணியில் இணைவதில் இழுத்தடிப்பு செய்துவருகின்றனர். இவ்வாறானதொரு பின்புலத்திலேயே சில உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைய முன்வந்துள்ளனர்.

பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ், நாடாளுமன்ற உறுப்பினர் வசந்த யாப்பா பண்டார ஆகியோர் தற்போது சஜித் அணியுடன் நெருக்கமாக செயற்பட்டுவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles