எதிர்க்கட்சி தலைவராகிறார் நாமல்? மஹிந்தவிடம் யோசனை முன்வைப்பு!

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைவர் நாமல் ராஜபக்சவை எதிர்க்கட்சி தலைவராக்க வேண்டும் என்று ‘மொட்டு’வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கமைய மொட்டு கட்சியின் நாடாளுமன்ற குழுவொன்று எதிரணியில் அமர்வதற்கு இடமளிக்க வேண்டுமென அக்குழு யோசனை முன்வைத்துள்ளது என சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் அண்மையில் நடைபெற்ற சந்திப்பின்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது எனவும் தெரியவருகின்றது.

இங்கு பல்வேறு முரண்பட்ட கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ள போதிலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக, இந்த நேரத்தில் கடுமையான தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

பொதுஜன பெரமுன இந்த வேளையில் எதிர்க்கட்சியில் அமர்ந்தால், அது அரசுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்பதால், இவ்வாறானதொரு தீர்மானத்தை தற்போது எடுப்பது பொருத்தமானதல்ல என சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Related Articles

Latest Articles