பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறை, உழைப்பு சுரண்டல் குறித்து ஐ.நாவிடம் இதொகா எடுத்துரைப்பு

மலையக மக்கள் எதிர்நோக்கும் உரிமை ரீதியான பிரச்சினைகள், மலையக பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு எதிரான சில பெருந்தோட்ட நிறுவனங்களின் அடக்குமுறைகள், உழைப்பு சுரண்டல்கள் மற்றும் மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்பட்டுவரும் வேலைத்திட்டங்கள் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சருமான ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகராலய பிரதானிகளிடம் எடுத்துரைத்துள்ளார்.

அத்துடன், மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு தமது தொழிற்சங்கத்தின் முழு ஆதரவு வழங்கப்படும் எனவும் அமைச்சர் உறுதியளித்துள்ளார்.

ஜெனிவாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ள அமைச்சர் ஜீவன் தொண்டமான், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலக பிரதானிகளுடன் சந்திப்பில் ஈடுபட்டார்.

ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் உயர்தானிர் அலுவலகத்தின் பிரதானி செட்யா ஜெனிங்ஸ், இலங்கை தொடர்பான இலங்கைக்கான மனித உரிமை பிரிவின் தலைம அதிகாரி எலினா செங் ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.

அமைச்சருடன், இ.தொ.காவின் உப தலைவரும், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவருமான பாரத் அருள்சாமி, அமைச்சின் ஆலோசகர் ஹரித்த விக்கிரமசிங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

பெருந்தோட்ட தொழிலாளர்கள் கடந்த 200 வருடங்களாக கடந்துவந்த பாதை குறித்தும், அவர்கள் எதிர்நோக்கிய சவால்கள் மற்றும் மனித உரிமை ரீதியான பிரச்சினைகள் தொடர்பிலும் அமைச்சர் தலைமையிலான குழுவினர் எடுத்துரைத்தனர்.

2021 ஆம் ஆண்டு இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் டொமொயோ ஒகோடோவா , மலையக பெருந்தோட்ட சமூகத்தின் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்திருந்தார். பெருந்தோட்ட தொழிலாளர்களின் உழைப்பு சுரண்டப்படுகின்றது, நவீன அடிமைகளாக அவர்கள் நடத்தப்படுகின்றனர் எனவும் சுட்டிக்காட்டிருந்தார். இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்டு கம்பனிகளுக்கும், அரசுக்கும் அழுத்தங்களை பிரயோகித்தோம் என ஐ.நா. அதிகாரிகளிடம், அமைச்சர் தரப்பினர் எடுத்துரைத்தனர்.

ஆனால் மலையகத்தில் நாம் முன்னெடுத்துள்ள வீட்டு திட்டம், உட்கட்டமைப்பு அபிவிருத்தி, கல்வி அபிவிருத்தி எதிர்காலத்தில் முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள வீட்டு திட்டம், மலையக மக்களுக்கான விசேட காணி உரிமை வழங்கும் திட்டம் பற்றியும் விளக்கமளிக்க பட்டதோடு இவற்றையும் ஆவணப்படுத்த வேண்டும் என என்பதையும் முன்வைக்கப்பட்டது.

மீண்டும் ஒருமுறை மனித உரிமை உயர்ஸ்தானிகராலய தூதுக்குழு இலங்கைக்கும் பெருந்தோட்ட பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொள்ள வர வேண்டும் என்ற அழைப்பையும் அமைச்சர் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.

 

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles