புறக்கோட்டை 2ஆம் குறுக்கு தெருவில் உள்ள ஆடையகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது.
எரிகாயம் மற்றும் கடும் புகையால் ஏற்பட்ட சுவாச கோளாறு காரணமாக பாதிக்கப்பட்டவர்களே இவ்வாறு கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் மூவருக்கு ‘ஒட்சீசன்’ வழங்கப்படுகின்றது.
இன்று காலை தீ பரவல் ஏற்பட்டதைடுத்து 11 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு வரைந்தன. 43 தீயணைப்பு படையினரும் சென்றிருந்தனர்.
கடும் போராட்டத்துக்கு மத்தியில் தற்போது தீ பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
