சிவனொளிபாத மலை யாத்திரை டிசம்பர் 26 ஆரம்பம்!

2023 – 2024 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரை எதிர்வரும் டிசம்பர் 26 ஆம் திகதி ஆரம்பமாகின்றது.

இதற்கான முன்னேற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் எதிர்வரும் 10 ஆம் திகதி ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வண. பெங்கமுவே தம்மதின்ன தேரர் தலைமையில் நல்லத்தண்ணி நகரில் உள்ள பௌத்த மண்டபத்தில் நடைபெற்றது.

நுவரெலியா மாவட்ட அரச அதிபர் உட்பட அரச அதிகாரிகள், பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், வன பாதுகாப்பு அதிகாரிகள், நகர வர்த்தகர்கள், நல்லதண்ணி நகரில் உள்ள விருந்தினர் விடுதி உரிமையாளர்கள் உள்ளிட்டோர் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர்.

மஸ்கெலியா நிருபர் செதி பெருமாள்

Related Articles

Latest Articles