பதுளை, கொட்டகொட பகுதியில் உள்ள வீடொன்றில் படுக்கை அறையின் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6600 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் நேற்று (02) கைது செய்யப்பட்டதாக பதுளை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
32 வயதுடைய பதுளை, பல்லேகம, கொட்டகொட பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய ஐஸ் போதைப்பொருள் வாங்கும் போர்வையில் குறித்த வீட்டை சுற்றிவளைத்து தேடுதலை மேற்கொண்ட போது படுக்கையறையில் மெத்தையின் கீழ் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஐஸ் போதைப்பொருளுடள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் இன்றைய தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்.
ராமு தனராஜா










