” இலங்கை கிரிக்கெட், நிர்வாகத்திலும் விளையாட்டிலும் தனியுரிமை வாதம் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்நிலையில் இருந்து மீண்டு வர தனியுரிமை சர்ச்சைகள், வாதங்கள் இல்லாது கிரிக்கெட் மீண்டெழ வேண்டும் , இதற்கு நல்ல புரிதல் உள்ள திறமையானவர்களிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்து, அரசியல் ரீதியிலான தலையீடுகள் இடம்பெறாதிருக்க வேண்டும்.” என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
” சகல விளையாட்டுகளும் அரசியல் தலையீடுகள் இன்றி இருக்க வேண்டும் ,விளையாட்டு குறித்து நன்கு புரிதல் உள்ளவர்களுக்கு அதன் பொறுப்பைக் ஒப்படைத்து,கிரிக்கெட்டில் நிலவி வரும் தகுதிகளைப் பொருட்படுத்தாமல் அதிகாரம் உடைய பதவிகளுக்கு நியமனம் செய்யும் குரோனிசம் நடைமுறையில் களையப்பட வேண்டும் , தற்சமயம் கிரிக்கெட்டில் உள்ள குரோனிசம் காரணமாக பாடசாலை மற்றும் கழக மட்டத்திலான வீரர்களுக்கு கிடைக்க வேண்டிய உரிய இடம் கிடைக்காது போயுள்ளது , 220 இலட்சம் மக்களுடன் இணைந்த கிரிக்கெட் ஒரு சிலரின் பேராசைக்காக பயன்படுத்தப்பட்டது பெரும் அவலத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில்,சகல விளையாட்டுகளும் அரசியல் தலையீடுகள் தவிர்ந்து ஒழுங்குபடுத்தப்பட்டு, அந்தந்த விளையாட்டு குறித்த அறிவுடன் உலகை வென்ற வீரர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும்.
எந்தவொரு வீரரையும்,காப்பாற்றவோ கைவிடவோ அல்லது தூக்கிப் பிடிக்கவோ தட்டிவிடவோ ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் தயாராக இல்லை.” என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.
