செம்மணி மனிதப் புதைகுழியில், இருந்து இன்று (18) 10 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 55 வது நாளான இன்று 10 என்பு கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 08 எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை 109 நாள்கள் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் போது, 582 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டதுடன், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 573 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
