ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிறுவுனர் பஸில் ராஜபக்ச, நாடாளுமன்றம்சென்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு பதவியை ஏற்கவேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பாகும் – என்று நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அலுவலகத்தில் இன்று (3) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக பதவிவகித்த காலப்பகுதியில் பொருளாதார நெருக்கடியை வெற்றிகொள்வதற்கு பஸில் ராஜபக்ச தீவிரமாக செயற்பட்டார். அதில் வெற்றியும் கண்டார். எனவே, அவ்வாறானதொரு தலைவர் நாடாளுமன்றம் வரவேண்டும், பொருளாதாரதுறை சார் பதவியொன்றை ஏற்கவேண்டும் என அனைவரும் விரும்புகின்றனர். எனது கருத்தும் அதுவே.
தற்போதுகூட ஜனாதிபதி செயலணியில் இருந்துகொண்டு கொரோனா நெருக்கடியை எதிர்கொள்வதற்கு தேவையான திட்டங்களை முன்னெடுத்துவருகின்றார்.” – என்றும் டிலான் பெரேரா குறிப்பிட்டார்.