பேராதனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெலிஓயா, கல்கமுவ பகுதியில் நீரில்மூழ்கி இளம் குடும்பஸ்தர் ஒருவர் பலியாகியுள்ளார். மொகமட் சுனஹர் என்ற 23 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு பலியாகியுள்ளார்.
குடும்ப உறுப்பினர்களுடன் இணைந்து நேற்று (03.11.2020) மாலை 4 மணியளவில் கல்கமுவ பகுதியை ஊடறுத்துச்செல்லும் மகாவலி கங்கையில் நீராடுவதற்குச்சென்றுள்ளார்.
இதன்போதே நீரில்மூழ்கி காணாமல்போயுள்ளார், இதனையடுத்து பொலிஸாரும், சுழியோடிகளும், பிரதேச வாசிகளும் இணைந்து தேடுதல் நடத்தினர். இன்று (4) இரண்டாவது நாளாகவும் தேடுதல் தொடர்ந்தது. எனினும், சடலம் மீட்கப்படவில்லை.