பிலிப்பைன்ஸில் மத வழிபாட்டின்போது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நால்வர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவத்தில் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
பிலிப்பைன்ஸின் Mindanao தீவிலுள்ள பல்கலைக்கழகமொன்றில் உடற்பயிற்சி கூடத்தில் இந்து நடைபெற்ற கத்தோலிக்க மத வழிபாட்டின் போது இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், பல்கலைக்கழக வளாகத்தில் பாதிப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலதிக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பணிக்கமர்த்தப்பட்டுள்ளனர்.
பல்கலைக்கழகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையாக இருப்பதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
அத்துடன், சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பிராந்திய பொலிஸ் தலைமை அதிகாரி Allan Nobleza தெரிவித்துள்ளார்.
இதனிடையே, அமைதியான கலாசாரத்தை ஊக்குவிக்கும் கல்வி நிறுவனங்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் கண்டிக்கப்பட வேண்டும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி Ferdinand Marcos தெரிவித்துள்ளார்.