புதிய களனி பாலம் மீள திறப்பு

அத்தியாவசிய திருத்தப்பணிகள் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த புதிய களனி பாலம் இன்று(04) காலை 6 மணி முதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

திருத்தப் பணிகளின் இரண்டாம் கட்டத்தின் கீழ் குறித்த பாலம் டிசம்பர் 08 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 09 மணி முதல், டிசம்பர் 11 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06 மணி வரை மீண்டும் மூடப்படவுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மூன்றாம் கட்டத்தின் கீழ் டிசம்பர் 15 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 09 மணி முதல் டிசம்பர் 18 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 06 மணி வரை புதிய களனி பாலம் மூடப்படவுள்ளது.

பாலம் மூடப்படும் காலப்பகுதியில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸார் மக்களை கேட்டுக் கொண்டுள்ளனர்.

Related Articles

Latest Articles