காயத்திரி விக்கிரமசிங்கவுக்கு இராஜராஜ சோழன் சர்வதேச விருது !

கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உருப்பினரும் அரசியல், சமூக, ஆன்மீக செயற்பாட்டாளருமாகிய காயத்திரி விக்கிரமசிங்கவுக்கு இராஜராஜ சோழன் சர்வதேச விருது வழங்கப்பட்டுள்ளது.

காத்திரி விக்கிரமசிங்கவின் சேவைகளை பாராட்டி சென்னையில் ருத் ரக்‌ஷா பவுண்டேசன் ஏற்பாட்டில் கடந்த 31/11/2023 அன்று நடைபெற்ற இராஜராஜ சோழன் சர்வதேச விருது வழங்கும் நிகழ்விலேயே இவர் இராஜராஜ சோழன் விருதினை பெற்றுள்ளார்.

தமிழுக்கும், ஆன்மீகத்திற்கும், சமூகத்திற்கும் தம்மை அர்ப்பணிப்போரை பாராட்டி வழங்கப்படும் மேற்படி விருதினை இம்முறை இலங்கை சார்பில் காயத்திரி விக்கிரமசிங்க பெற்றுள்ளமை சிறப்பம்சமாகும்.

பதிவு –  கேஜி

Related Articles

Latest Articles