” தமிழ் அரசியல் கைதிகளுக்கு விடுதலை வழங்குமாறுகோரி எவராவது மனுகொண்டுவந்தால் அதில் இரத்தத்தில் கையொப்பமிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (4) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
” கொலையாளியை விடுதலை செய்யுமாறுகோரும் மனுவில் நான் கையொப்பமிடவில்லை. மலையக மக்களுக்கு துரோகம் இழைக்கும் வகையில் எந்தவொரு முடிவையும் நான் ஒருபோதும் எடுக்கமாட்டேன். எனினும், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறுகோரி அரசாங்கமோ அல்லது வேறு எவரோ மனு கொண்டுவந்தால் அதில் மலையக மக்களின் சார்பில் இரத்தத்தில் கையொப்பிடுவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.
கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. மலையக பெருந்தோட்டப்பகுதிகளில் உரிய சுகாதார வசதிகள் இல்லை, நிவாரணத் திட்டமும் முன்னெடுக்கப்படவில்லை. ஜனாதிபதியின் ஒருவருடகால பயணம் என்பது தோல்வியில் முடிந்துள்ளது என்பது மட்டும் உறுதி.” – என்றும் வடிவேல் சுரேஷ் குறிப்பிட்டார்.