சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு, பெண்களுக்கு எதிரான வன்முறையை ஒழிக்க பிரகடனம் ஒன்று இன்று வெளியிட்டு வைக்கப்பட்டது என பிரிடோ நிறுவனத்தின் முகாமையாளர் கருணாகரன் தெரிவித்தார்.
இதற்கான நிகழ்வு ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் பிரடோ நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மைக்கல் ஆர் ஜோக்கிம் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” கடந்த நவம்பர் 25 ஆம் திகதி தொடக்கம் பெண்களுக்கு எதிரான வன்முறையினை ஒழிப்பதற்காக தோட்டங்கள் தோறும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.
இந்த நாட்டிக்கு அந்நியச் செலவாணியினை கொண்டு வருகின்ற பெண்கள் துன்புறுத்தப்படுகிறார்கள். இவ்வாறான துன்புறுத்தல்கள் இல்லாதொழிக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டின் பொருளாதாரம் மேம்படும்.
அத்துடன், வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் கிளையொன்று நுவரெலியாவில் திறக்கப்பட வேண்டும் என 50, 000 கையொப்பங்களை திரட்டியிருக்கின்றோம். அதனையும் இன்று வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளிடம் கையளிக்க உள்ளோம். ” – என்றார்.
இதன்போது கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெற்றன .
மலைவாஞ்ஞன்










