சீரற்ற காலநிலையால் ஹல்முதுல்ல பிரிவில் மூன்று பாடசாலைகள் இன்று மூடப்பட்டன என்று ஹல்முதுல்ல பிரதேச கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார்.
எனினும், மாணவர்களின் கல்வி நடவடிக்கை பாதிக்காமல் இருப்பதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார்.
பண்டாரவளை கல்வி வலயத்தின் பணிப்பாளரின் பணிப்புரைக்கமையவே இதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கலிபனாவெல பாடசாலை மாணவர்கள், வெல்லவாய கம்பஹா பாடசாலைக்கும், பிளாக்வூட் மாணவர்கள், ஹல்முல்ல தமிழ் மகா வித்தியாலயத்துக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு பாடசாலை மாணவர்களும், அருகில் உள்ள பாடசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.










