” கொழும்பில் தமிழ் மக்களை இலக்கு வைத்து பொலிஸார் மேற்கொள்ளும் அநீதி நிறுத்தப்பட வேண்டும்.” – என்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தினார்.
நாடாளுமன்றத்தில் இன்று கருத்து வெளியிட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன்,
” கிருலப்பனை, வெள்ளவத்தை,தெஹிவளை,பம்பலப்பிட்டி, நாரஹேன்பிட்ட, கொட்டாஞ்சேனை, மட்டக்குளி மற்றும் மோதர ஆகிய பொலிஸ் பிரிவுகளில் உள்ள தமிழ் மக்களை குறிவைத்து பொலிஸ் பதிவு இடம்பெற்றுவருகின்றது.
இந்த அனைத்து பதிவு விபர பத்திர ஆவணங்களும் சிங்கள மொழியிலயே வழங்கப்படுகின்றது. பொலிஸ் பதிவு நிறுத்தப்பட வேண்டும்.” – என குறிப்பிட்டார்.
இதன் பின்னர் கருத்து வெளியிட்ட எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச,
” இந்த நாட்டில் ஆட்களை பதிவு செய்யும் நடைமுறையொன்று உள்ளது, இந்த பதிவு முறைமைக்கு அமையவே நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் தேசியப் பாதுகாப்பைப் போலவே குற்றங்களைக் குறைப்பதும் முக்கியம் . எனினும் ஏதேனும் நியாயமற்ற முறை நடைமுறைப்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது , எந்தவொரு வேலைத்திட்டத்திலும் வெளிப்படைத்தன்மையும் ஜனநாயகமும் நிலைநாட்டப்பட வேண்டும்.” – எனவும் குறிப்பிட்டார் சஜித்.










