கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி; எலும்புக்கூடுகளின் பாலினத்தை கண்டறிய ஆய்வு

போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியின் கொக்குத்தொடுவாய் பகுதியில் ஆறு மாதங்களுக்கு முன்னர் தோண்டப்பட்ட புதைகுழியில் இருந்து தோண்டியெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பாலினத்தை (ஆண், பெண்) அடையாளம்காண அடுத்த வாரம் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தை அண்மித்து எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் ஜூன் மாத இறுதியில் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு டிசம்பர் 14ஆம் திகதி வியாழக்கிழமையான இன்று அழைக்கப்பட்டு, அங்கு இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பான ஊடகங்களுக்கு வெளிப்படுத்தியதாக சட்டத்தரணி வி.கே. நிரஞ்சன் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ள திகதிகள் குறித்து சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றத்திற்கு அறிவித்ததாக குறிப்பிட்டார்.

“ஏற்கனவே எடுக்கப்பட்ட 40 மனித எலும்புக் கூடுகளில் இருந்து அதனுடைய ஆய்வுகளை, அதன் வயது, அது ஆணா பெண்ணா போன்ற ஆய்வுகளை டிசம்பர் 21 மற்றும் 22ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்வது தொடர்பாக சட்ட வைத்திய அதிகாரி வைத்தியர் வாசுதேவ இன்று நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.”

முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவ தலைமையில் பாரிய புதைகுழியில் இருந்து எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டன.

கொக்கிளாய், முல்லைத்தீவு பிரதான வீதியூடாக பாரிய புதைகுழி வியாபித்துள்ளதாக தெரியவந்ததையடுத்து, அதனை முழுமையாக தோண்டுவதற்கு தீர்மானிக்கப்பட்டதையடுத்து, கடந்த ஜூன் 29ஆம் திகதி, அகழ்வுப் பணிகளை தற்காலிகமாக நிறுத்த நீதிமன்றம் தீர்மானித்திருந்தது.

அகழ்வு பணிகளை மேற்கொள்வதற்கு தேவையான செலவுகள் குறித்தும் இன்று நீதிமன்றில் கலந்துரையாடப்பட்டதாக சட்டத்தரணி வீ.கே.நிரஞ்சன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

“மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள அகழ்வுப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதற்கான செலவுகள், குறிப்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையினரால் வீதி உடைக்கப்பட்டு மீண்டும் திருத்துவதற்கு எவ்வளவு தொகை செலவாகும் போன்ற விடயங்கள் பேசப்பட்டன.”

நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகள் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தின் கணக்காளர் ஆகியோரும் கலந்துகொண்டுள்ளனர்.

நவம்பர் 29ஆம் திகதி புதன்கிழமை முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், அடுத்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி முதல் அகழ்வுப் பணிகளை மீள ஆரம்பிக்க தீர்மானிக்கப்பட்டது.

அது தொடர்பான மேலதிகத் தீர்மானத்திற்காக இந்த வழக்கை பெப்ரவரி 22ஆம் திகதி மீண்டும் அழைக்க முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் தீர்மானித்ததாக சட்டத்தரணி மேலும் தெரிவித்தார்.

கொக்குத்தொடுவாய் பாரிய புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணி நவம்பர் 29ஆம் திகதி ஒன்பதாவது நாளாக மேற்கொள்ளப்பட்டு, நண்பகல் வேளையில் நிறுத்தப்பட்ட போது, கொக்குத்தொடுவாய் வெகுஜன புதைகுழியில் இருந்து குறைந்தது 40 பேரின் எச்சங்கங் மீட்கப்பட்டன. அந்த சடலங்கள் விடுதலைப் புலி உறுப்பினர்களுடையது என சந்தேகிக்கப்படுவதற்கும் சில சான்றுகளும் காணப்படுகின்றன.

அகழ்வுப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள் தொடர்பான முதற்கட்ட அறிக்கையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பிக்க உள்ளதாக தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்திருந்தார்.

இதுவரை அகழ்வு செய்யப்பட்டுள்ள நிலத்தின் அளவு மற்றும் எதிர்காலத்தில் தோண்டப்பட உள்ள நிலத்தின் அளவு குறித்தும் சிரேஷ்ட பேராசிரியர் விளக்கியிருந்தார்.

“தற்போது 3 மீற்றர் அகலத்திலும் 14 மீற்றர் நீளத்திலும் தோண்டியுள்ளோம். நாங்கள் இங்கு வந்தபோதும் கனரக இயந்திரங்களைக் கொண்டு தோண்டியிருந்ததால் அது நீளமாகவும் அகலமாகவும் இருந்தது. எனவே இந்த 40 எலும்புக்கூடுகளை அகற்றிய பின்னர், குறைந்தது இரண்டு மீற்றர் தூரத்திற்கு தோண்ட வேண்டும். 3 மீற்றர் மற்றும் 2 மீட்டர் சதுர மீட்டர்கள் என எடுத்துக் கொண்டால், நீளம் 2, அகலம் 3, ஆழம் சுமார் ஒன்றரை மீட்டர். எஞ்சிய எலும்புக்கூடுகளை வெளிக்கொண்டுவர 6.63 கனமீட்டர் மண் அகற்றப்பட வேண்டும் என்பது எங்கள் கணிப்பு.”

கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயத்தில் இருந்து கொக்கிளாய் நோக்கி சுமார் 200 மீற்றர் தொலைவில் நீர் வழங்கல் திணைக்கள ஊழியர்கள் நீர் குழாய் பதிக்க நிலத்தை தோண்டும் வேளையில் ஜூன் 29ஆம் திகதி வியாழக்கிழமை மாலை மனித உடல் பாகங்கள் மற்றும் ஆடைகளின் ஒரு பகுதி கண்டெடுக்கப்பட்டன.

Video thumbnail
அநுர குமாரவின் கட்சியில் குடும்ப உறுப்பினர்கள் இல்லையா?
58:18
Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39

Related Articles

Latest Articles