ஒலிபண்ட் தோட்டத்தில் கத்திக்குத்து – ஒருவர் காயம்! நால்வர் கைது!!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் நபரொருவர்மீது கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. படுகாயம் அடைந்த அவர் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர் நுவரெலியா குற்றத்தடுப்பு பொலிஸாருக்கு வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் , இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒலிபண்ட் தோட்டத்தை சேர்ந்த 4 பேரை நுவரெலியா பொலிஸார் கைது செய்துள்ளனர்.

ஒலிபண்ட் தோட்டம் கீழ் பிரிவுக்கு உட்பட்ட இலக்கம் 05 தேயிலை மலையில் 05 ஏக்கர் நிலத்தை தனிநபர் ஒருவருக்கு கடந்த எட்டு வருடங்களுக்கு மேலாக விவசாயம் செய்வதற்கு தோட்ட நிர்வாகம் குத்தகைக்கு வழங்கியுள்ளது.

குத்தகை காலம் முடிந்த நிலையில் இவ்விவசாய நிலத்தை தோட்ட நிர்வாகத்திற்கு வழங்குவதில் குத்தகைதாரர்கள் மற்றும் தோட்ட நிர்வாகத்திற்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து குறித்த நிலம் தொடர்பில் நுவரெலியா மாவட்டத்தில் வழக்கும் தொடரப்பட்டு அந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் குத்தைகைகாரரான தனிநபர் குத்தகை அடிப்படையில் பெற்றுக் கொண்ட நிலத்தை மீண்டும் தோட்ட நிர்வாகத்திற்கு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குத்தகைகாரரான தனிநபர் தான் விவசாயம் செய்து வந்திருந்த தோட்ட நிர்வாகத்துக்குரிய நிலத்திலிருந்து விலகி அங்கு வைக்கப்பட்டிருந்த விவசாய பொருட்களை அகற்றுவதற்கு காலதாமதம் ஏற்படுத்தியுள்ள நிலையில் அந்த நிலத்தை நீதிமன்ற உத்தரவின் பேரில் பொறுப்பேற்ற தோட்ட நிர்வாகம் மீண்டும் அந்நிலத்தில் தேயிலை கன்றுகளை பயிரிட்டுள்ளது.

அதேநேரத்தில் நிலத்திலிருந்து அகற்றப்படாத தனது விவசாய பொருட்களை பாதுகாக்க அவ்விவசாய நிலத்தினை மேற்பார்வை செய்து வந்த ஒலிபண்ட் தோட்ட நபர் ஒருவரை காவலிலும் ஈடுபடுத்தியுள்ள நிலையில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்தேறியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஈடுபட்டதாக கூயப்படுபவர்கள் தோட்ட நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் தொழிலாற்றும் தோட்ட தொழிலாளர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles