ஆபிரிக்க கால்பந்து கூட்டமைப்பும் போர்க்கொடி! பதவி துறப்பாரா FIFA தலைவர்?

சர்ச்சைக்கிரிய FIFA தலைவர் ஜான்னி இன்பான்டினோவிற்கு (Gianni Infantino) வழங்கி வந்த ஆதரவை அயர்லாந்து கால்பந்து சம்மேளனம் திரும்பப் பெற்றுள்ள நிலையில், இன்பான்டினோவின் எதிர்காலம் தேர்தல் மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும் என ஆபிரிக்கக் கால்பந்து கூட்டமைப்பின் (CAF) தலைவர் பேட்ரிஸ் மொட்செபே (Patrice Motsepe) வலியுறுத்தியுள்ளார்.

உலகக் கோப்பை போட்டிகளின் பங்குகளைத் தனிப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விற்பனை செய்யத் திட்டமிட்ட இன்பான்டினோ, கடும் விமர்சனங்களைச் சந்தித்ததைத் தொடர்ந்து, தனது பதவியைத் தக்கவைத்துக்கொள்ளப் போராடி வருகிறார்.

ஐரோப்பியக் கால்பந்து நிர்வாக அமைப்பு (UEFA), வட மற்றும் மத்திய அமெரிக்கக் கால்பந்து அமைப்பு (CONCACAF) மற்றும் ஆசியக் கால்பந்து கூட்டமைப்பு (AFC) ஆகியன இந்த வாரம் இன்பான்டினோவிற்கு எதிராக அனுப்பிய கடிதத்தில், “தமக்கு அதிகாரமளித்த அமைப்பிற்கு மேல் ஒரு தனிநபர் தன்னை உயர்த்திக் கொள்ளும்போது, அந்த நம்பிக்கை உடைந்துபோகிறது” எனக் குறிப்பிட்டு அழுத்தத்தை அதிகரித்துள்ளன.

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் இன்பான்டினோ மீண்டும் போட்டியிடுவதற்கு முன்பாகவே, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என இந்த அமைப்புகள் விரும்புவதாக நம்பப்படுகிறது.

எனினும், FIFA வின் துணைத் தலைவரும் ஆப்பிரிக்கக் கால்பந்து கூட்டமைப்பின் (CAF) தலைவருமான மொட்செபே, இன்பான்டினோவின் எதிர்காலம் வாக்குச் சீட்டு முறையிலேயே (தேர்தலில்) தீர்மானிக்கப்பட வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles