பஸ் மோதி எட்டு மாடுகள் இறந்தன – அதிக வேகத்தால் ஏற்பட்ட விபரீதம்….!

மன்னார் – யாழ்ப்பாணம் பிரதான வீதி நாயாத்துவழி பகுதியில் திங்கள் நேற்று (25) மாலை இடம்பெற்ற விபத்தில் 8 மாடுகள் உயிரிழந்துள்ளன. பல மாடுகள் படுகாயமடைந்துள்ளன.

யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னார் நோக்கிப் பயணிகளுடன் அதி வேகமாகப் பயணித்த தனியார் பஸ் நாயாத்து வழி பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த மாடுகளின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் கூட்டமாக சென்ற மாடுகளில் 8 மாடுகள் சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தன. பல மாடுகள்
பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச செயலர் பிரிவில் உள்ள சாலம்பன் கிராமத்தைச் சேர்ந்த பண்ணையாளர்களின் மாடுகள் மேய்ச்சலுக்கு கொண்டு செல்லப்பட்டு மீண்டும் மாட்டுத் தொழுவத்துக்குக் கொண்டு செல்லப்பட்ட போது விபத்து
இடம் பெற்றுள்ளது.

பயணிகளுடன் யாழ்ப்பாணத்தில் இருந்து அதிவேகமாக வந்த தனியார் பஸ் கட்டுப்பாட்டை இழந்து மாடுகளின்
மீது மோதியுள்ளது. இந்த நிலையில் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தனியார் பஸ் சாரதியின் கவனயீ னமே விபத்துக்குக் காரணம் எனவும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு பொறுப்பற்ற விதத்தில் வாகனம் செலத்துவோர் தொடர்பில் பொலிஸார் கடும் நடவடிக்கை எடுக்க
வேண்டும் என்று மக்கள் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற அடம்பன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles