நத்தார் ஆராதனைக்கு சென்றிருந்த வர்த்தகரின் வீடு உடைப்பு – ரூ. 70 லட்சம் பெறுமதியான நகைகளும், பணமும் கொள்ளை

புத்தளம், உடப்பு – பூனைப்பிட்டி பகுதியில் உள்ள வர்த்தகர் ஒருவரது வீடொன்றில் இருந்து 70 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம் என்பன நேற்று (25) அதிகாலை திருடப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.

தங்க நகைகள் மற்றும் பணம் என் பன திருடப்பட்ட சமயத்தில் வீட்டில்
எவரும் இருக்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேங்காய் மற்றும் இறால் விற்பனையில் ஈடுபட்டுவரும் அந்த பிர தேசத்தின் வியாபாரியின் வீட்டிலேயே இந்தத் திருட்டு இடம்பெற்றுள்ளது என்று உடப்பு பொலிஸார் குறிப்பிட்டனர்.

அந்த வர்த்தகர் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் நேற்று முன்தினம் இரவு வட்டவான் பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் நடை பெற்றநள்ளிரவு விஷேட நத்தார் ஆராதனை நிகழ்வில் கலந்து கொள்ளச் சென்று விட்டார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

பின்னர் நேற்று அதிகாலை (25) மீண்டும் வீட்டுக்கு வருகை தந்து பார்த்து போது, வீட்டில் உள்ள பொருள் களை அங்கும், இங்குமாக வீசப்பட்டிந்துள்ளன. வீட்டில் இருந்த தங்க நகைகள் மற்றும் பணம் என்பனவும் திருட்டுப் போயிருந்தன. இது பற்றி வீட்டின்
உரிமையாளரான வர்த்தகர் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.

முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு சென்ற உடப்பு பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி தம்மிக குலதூங்க தலைமையிலான பொலிஸ் குழுவினரும், பொலிஸ் புலனாய்வு பிரிவினரும் அங்கு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

தங்க நகைகள் மற்றும் பணம் என் பன திருட்டுப் போயிருந்த வீட்டின்
ஜன்னல் உடைக்ப்பட்டுள்ளது. இதனூ டாக உள்ளே சென்ற கொள்ளையர்கள் திருட்டில் ஈடுபட்டிருப்பது மேற்கொள்ளப் பட்ட ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன், புத்தளம் பொலிஸ் தடய வியல் பிரிவினரும், கை ரேகை பரிசோதனை பிரிவினரும் சம்பவ இடத்துக்கு வருகை தந்து அங்கு விசாரணைகளை முன்னெடுத்தனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர் பில் உடப்பு பொலிஸாருடன் இணைந்து, பொலிஸ் தடயவியல் பிரிவினரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

Latest Articles