யுக்திய ஒப்பரேஷன் நிறுத்தப்படுமா?

‘யுக்திய’ தேடுதல் நடவடிக்கை நிறுத்தப்படமாட்டாது. போதைப்பொருள் கடத்தல், பாதாள குழுக்களின் செயற்பாடுகளுக்கு முடிவுகட்டப்படும்வரை அது தொடரும். எந்த சக்தியாலும் அந்த நடவடிக்கையை நிறுத்த முடியாது.”

இவ்வாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்தார்.

நத்தார் பண்டிகையை முன்னிட்டு பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டமையால் நேற்றும்(26) நேற்று முன்தினமும்(25) யுக்திய சுற்றிவளைப்பு மட்டுப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் யுக்திய சுற்றிவளைப்பு இன்று(27) முதல் மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தல்காரர்கள் சகலரையும் சட்டத்திற்கு முன் நிறுத்தும் வரையில் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

Related Articles

Latest Articles