பசறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பசறை பிபிலை வீதி 13 ஆம் கட்டை பகுதியில் வீடொன்றில் இருந்து பெண்ணொருவரது சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்தவர் 54 வயதுடைய ராசையா வனசுந்தரி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
குறித்த பெண் சில தினங்களாக வீட்டில் தனிமையில் வாழ்ந்து வந்ததாகவும் பின்னர் அவரை காணாததால் பெண்ணின் சகோதரன் மற்றும் அயலவர்கள் சென்று பார்வையிட்ட போது வீட்டினுள் இறந்த நிலையில் காணப்பட்டதாக தெரியவந்துள்ளது.
பின்னர் பசறை பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். அவர் உயிரிழந்து சுமார் 6 நாட்களுக்கு மேல் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீதவான் சடலத்தை பார்வையிட்டதன் பின்னர் சடலம் பதுளை வைத்தியசாலை பிரேத அறையில் பிரேத பரிசோதனைகளுக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா