புதிய அரசியல் கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா இன்று அறிவித்துள்ளார்.
இன்னும் ஓரிரு நாட்களில் கட்சி மலரும் எனவும், அதில் முக்கிய புள்ளிகள் அங்கம் வகிப்பார்கள் எனவும் மேர்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, தான் தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.