பதுளை கல்வி வலயத்தில் இரு ஆசிரியர்கள் பாலியல் சேட்டை – விசாரணை ஆரம்பம்

பதுளை கல்வி வலயத்துக்குட்பட்ட தமிழ் பாடசாலையொன்றில் பணிபுரிந்து வரும் இரண்டு ஆசிரியர்கள் பாலியல் சேட்டைகளில் ஈடுபட்டு வருகின்ற சம்பவம் தொடர்பாக உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாச்சலம் அரவிந்தகுமார் பதுளை வலயகல்வி பணிமனையின் பணிப்பாளருக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

இரண்டு ஆசியர்களும் அதே பாடசாலையில் கல்வி பயின்று வருகின்ற ஐம்பது மாணவர்களோடு தனியார் வகுப்பு நடத்தும் பேரில், பாலியல் சேஷ்டையில் ஈடுபட்டு வருவதாகக் கல்வி அமைச்சுக்கு முறைப்பாடு ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளதன் அடிப்படையில், உடன் விசாரணைகளை ஆரம்பித்து கல்வி அமைச்சுக்கு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பிக்குமாறு பணிப்பாளருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விசாரனைக்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles