பண்டாரவளை – ஹில்ஓய ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் பாதையில் இன்று பிற்பகல் மண்மேடு சரிந்து விழுந்ததால் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பதுளை அலுவலகம் தெரிவித்துள்ளது.
மண்மேட்டை அகற்றி, ரயில் பாதையை சீர்செய்ய இராணுவம் அழைக்கப்பட்டுள்ளது.
பதுளையில் இருந்து கொழும்பு நோக்கி இன்று காலை புறப்பட்ட பொடிமெனிக்கே ரயில், தடம்புரண்டதால் ரயில் சேவை தாமதமானது. தற்போது மண்மேடும் சரிந்துள்ளதால் மலையக ரயில் சேவை மேலும் தாமதமாகக்கூடும்.
ராமுதனராஜ்
