12 நாட்களுக்குள் 17,837 பேர் கைது! கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களின் அளவு எவ்வளவு தெரியுமா?

நாடு தழுவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் ‘யுக்திய ஒப்பரேஷன்’ நடவடிக்கையின்கீழ் கடந்த 12 நாட்களுக்குள் 17 ஆயிரத்து 837 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் 850 பேர் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டுவருகின்றனர். 186 பேர் தொடர்பில் சொத்து சம்பந்தமான விசாரணகள் முன்னெடுக்கப்படுகின்றன.

போதைப்பொருளுக:கு அடிமையான ஆயிரத்து 187 பேர் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

டிசம்பர் 17 முதல் டிசம்பர் 28 ஆம் திகதிவரையான 10 கிலோ 550 கிராம் ஹெரோயினும், 6 கிலோ 740 கிராம் ஐஸ் போதைப்பொருளும், 288 கிலோ கஞ்சாவும் மீட்கப்பட்டுள்ளன. 20 லட்சத்துக்கு மேற்பட்ட கஞ்சா செடிகளும் மீட்கப்பட்டுள்ளன.

118 கிலோ மாவாவும், 551 கிராம் குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது

அத்துடன், 71 ஆயிரத்து 271 போதை மாத்திரைகளும் மீட்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles