மண்சரிவால் பதுளை – ஹொப்டன் கலைமகள் தமிழ் மகா வித்தியாலய கட்டடம் சேதம்

பதுளை மாவட்டத்தில் பெய்துவரும் கடும் மழை காரணமாக லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹொப்டன் கலைமகள் தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்ப பிரிவு கட்டட தொகுதி பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

மண்மேட்டுடன், கற்கள் விழுந்துள்ளதால் பாடசாலைக்கு கடும் சேதம் ஏற்பட்டுள்ளது என்று பாடசாலையின் அதிபர் வடிவேல் நிரோஷன் தெரிவித்தார்.

இக்கட்டடத்தில் தரம் ஒன்று முதல் 5 வரையிலான மாணவர்களின் வகுப்புகள் உள்ளதுடன், மண் சரிவு காரணமாக மீண்டும் பயன்படுத்த முடியாத அளவிற்கு கட்டடம் சேதமடைந்துள்ளது.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles