பசறை பிரதேச சபையின் அடுத்தாண்டிற்கான (2021) வரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கை இரு மேலதிகவாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
பசறை பிரதேசசபைத் தலைவர் ஆர்.எம். ஞானதிலக்க தலைமையில், சபை மண்டபத்தில் 06-11-2020ல் சபையின் அடுத்தாண்டிற்கானவரவு–செலவுத்திட்ட அறிக்கை சமர்ப்பிக்கும் அமர்வு இடம்பெற்றது. சபை அமர்வு ஆரம்பமானதும், சபையின் தலைவர்,சபையின் அடுத்தாண்டிற்கானவரவு–செலவுத்திட்ட அறிக்கையை சமர்ப்பித்தார்.
அதையடுத்து சபையில் வாத, விவாதங்கள் இடம்பெற்று, இறுதியில், சமர்ப்பிக்கப்பட்டவரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கை வாக்கெடுப்பிற்குவிடப்பட்டது. பசறை பிரதேசசபையில் மொத்தம் 23 உறுப்பினர்கள் இருந்தபோதிலும், இவ் அமர்வில் 17 உறுப்பினர்கள் மட்டுமே,சமூகமளித்திருந்தனர்.
சபையின் இ.தொ.கா. சார்பான இரு உறுப்பினர்களும், ஸ்ரீலங்காசுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் நால்வருமாக ஆறு உறுப்பினர்கள் இச் சபை அமர்வில் சமூகமளிக்கவில்லை. அத்துடன் சமூகமளித்திருந்த ஸ்ரீலங்காபொதுஜன முன்னனி உறுப்பினர்கள் அறுவரும், ஜே.வி.பி. உறுப்பினரொருவருமாக ஏழு உறுப்பினர்கள்,சமர்ப்பிக்கப்பட்டவரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கைக்கு எதிராகவாக்களித்தார்.
சபையின் ஐக்கிய தேசியக்கட்சிசார் எட்டு உறுப்பினர்ளும்,சபையின் சுயேச்சைக்குழு உறுப்பினரொருவருமாக ஒன்பது உறுப்பினர்கள் சமர்ப்பிக்கப்பட்டவரவு–செலவுத்திட்டநிதி அறிக்கைக்கு ஆதரவாகவாக்களித்தனர். இதற்கமைய இரு மேலதிக வாக்குகளினால், அடுத்தாண்டிற்கான வரவு–செலவுத்திட்ட நிதி அறிக்கை நிறைவேற்றப்பட்டது.
எம். செல்வராஜா, பதுளை
தனராஜ்,