யாழ்.ஊடக அமையத்தால் மலையக குயில் அசானி நேற்று (31) கெளரவிக்கபட்டார்.
யாழ்ப்பாணம் விஜயம் மேற்கொண்டிருந்த அசானி தனக்கு உதவிய நல்லுலங்களுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாக நேற்று மாலை யாழ்.ஊடக அமையத்துக்கு குடும்பத்தினர் சகிதம் வருகை தந்தார்.
இதன் போது யாழ்ஊடக அமையத்தின் தலைவர் கு.செல்வக்குமார் அசானிக்கு பொன்னாடை போர்த்தி அவரை கெளரவித்தார்.
இதன் போது சரிகம போட்டி நிகழ்ச்சியில் கலந்து சிறப்பிக்க காரணமாக இருந்தவர்களுக்கு அசானி நன்றி தெரிவித்ததுடன் தனக்கு ஆதரவு வழங்கி தன்னை கவரவிக்கும் அனைவருக்கும் அசானி நன்றி தெரிவித்தார்.
இன்று தான் முதன்முறையாக யாழ்ப்பாணம் வருகை தருகின்றேன் தமிழ் மக்கள் எனக்கு வழங்கிவரும் ஆதரவுக்கும் அன்புக்கும் நன்றி தெரிவித்தார்.
எதிர்காலத்தில் பெரிய பாடகராகவந்து அதன் மூலம் மூலம் எனது மக்களுக்கு உதவி செய்வதே எனது விருப்பம் என தெரிவித்த அசானி தனது காந்தக் குரலால் 3 பாடல்களையும் பாடினார்.
இதேவேளை அசானியின் தாயார் கண்ணீர் மல்க தனது மகளின் திறமையை உலகறியச் செய்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும் பெயர் குறிப்பிட்டு நன்றி தெரிவித்தார்.











