மீன்பிடிக்கச்சென்ற இளைஞன் நீரிழ் மூழ்கி மாயம்…!

லொக்கல்ல ஓயாவில் இன்று, மீன்பிடிக்கச் சென்ற இளைஞன் ஒருவர் கரமட்டிய, ஹவன்கெட்டிய பிரதேசத்தில் உள்ள ஓடையில் தவறி விழுந்து காணாமல்போயுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இல. 22/1, வவ்பிட்டிய, கரமட்டியவில் வசிக்கும் 27 வயதுடைய  இளைஞரே இவ்வாறு காணாமல்போயுள்ளார்.

இன்று காலை தனது சகோதரனுடன் இவர் லொக்கல்ல ஓயாவிற்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார். இதன்போது கரமட்டிய ஹவன்கெட்டிய ஓடையில் தவறி விழுந்து  நீரில் அடித்துச் செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காணாமற்போன இளைஞனை தேடும் நடவடிக்கையை  பிரதேச மக்களுடன் இணைந்து கந்தகெட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

மேலதிக விசாரணைகளை கந்தகெட்டிய பொலிஸ் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ராமு தனராஜா

Related Articles

Latest Articles