“கேகாலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அதிதீவிரமாக நாளுக்குநாள் அதிகரித்து செல்கின்றமை அபாய நிலையை தோற்றுவித்துள்ளது. நேற்று மாலைவரை தொற்றா ளர்களின் எண்ணிக்கை 180 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மாத்திரம் 22 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மொத்தமாக 3 ஆயிரத்து 706 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளானவர்களில் 109 பேர் குணமடைந்துள்ளனர்.” – என்று கேகாலை மாவட்ட செயலாளர் மஹிந்த எஸ் வீரசூரிய தெரிவித்துள்ளார்.
கேகாலை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பிரதான நகரங்களை மையப்படுத்திய பிரதேச செயலகங்களில் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
பதிவான தொற்றாளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 180 தொற்றாளர்களில் மாவனல்லையில் 34பேரும்,கேகாலையில் 20பேரும், வரக்காபொலையில் 20 பேரும், ருவன்வெல்லையில் 20பேரும், தெஹியோவிட்டயில் 20பேரும், அரனாயக்கவில் 14பேரும், புலத்கோஹ{பிட்டியவில் 14பேரும், எட்டியாந்தோட்டையில் 13 பேரும், கலிகமுவயில் 12பேரும், ரம்புக்கணையில் 09பேரும், தெரணியகலையில் 04பேரும் தொற்றுக்குள்ளாகியுள்ளதாக மாவட்ட செயலாளர் தெரிவித்தார்.
இவற்றில் அதிகமானதொற்றாளர்கள் மாவனல்லைபிரதேசத்தில் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும். பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி வெளியில் வருவதைதவிர்த்துக்கொள்வதை பின்பற்றாது இருந்தால் எதிர்வரும் நாட்களில் நிலைமை மேலும் மோசமடையலாம். நிலைமையை கருத்தில் கொண்டுஎதிர்வரும் நாட்களில் கேகாலை மாவட்டத்தை முற்றாக முடக்குவது தொடர்பாக ஆலோசித்துவருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.