பெருந்தோட்டத்துறை முறைமை மாறுமா? 12 ஆம் திகதி விவாதம்…!

பெருந்தோட்ட தேயிலைக் கைத்தொழில் முறைமைக்குப் பதிலாக தேயிலை சிறு தோட்ட முறைமையொன்றினை ஏற்படுத்துமாறுகோரி தனிநபர் பிரேரணையொன்றை நாடாளுமன்றத்தில் முன்வைத்துள்ளார் தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரான வேலுகுமார்.

குறித்த பிரேரணை எதிர்வரும் 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துகொள்ளப்படவுள்ளது.

பாராளுமன்றம் எதிர்வரும் ஜனவரி 09ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரை கூடவுள்ளது.

2024 ஜனவரி 09ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 09.30 முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், அதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 05.00 மணிவரை தேசிய ஒற்றுமைக்கும், நல்லிணக்கத்துக்குமான அலுவலகம் சட்டமூலம் (இரண்டாம் மதிப்பீடு), தேசிய நீரளவை சட்டமூலம் (இரண்டாவது மதிப்பீடு), கொழும்பு துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டமூலத்தின் கீழ் 2355/30ஆம் இலக்க வர்த்தானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி, இலங்கை முதலீட்டுச் சபைச் சட்டத்தின் கீழ் 2334/55ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அதன் பின்னர், இலங்கை பட்டய கப்பல் தரகர்கள் நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம், இலங்கை சித்த உளவியல்சார் உயர் கற்கைநெறிகள் திறந்த நிறுவனம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம் என்பன இரண்டாவது மதிப்பீட்டுக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 05.00 மணி முதல் பி.ப 05.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான பிரேரணை (ஆளும் கட்சி) மீதான விவாதம் நடைபெறவுள்ளது.

Related Articles

Latest Articles