கசிப்பு காய்ச்சிய பெண் கைது!

யாழ்ப்பணம் கோப்பாய் பகுதியில் நீண்ட காலமாக கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்டு வந்த ஆண் ஒருவரும் பெண்ணொருவரும் பொலிஸாரின் விசேட சுற்றி வளைப்பின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.

நீண்ட நாட்களாக கசிப்பு உற்பத்தி ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து நேற்று விசேட சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது குறித்த இருவரிடமிருந்தும் 15 லிட்டர் கசிப்பு கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கீழ் இயங்கும் விசேட குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவினரால் குறித்த கைது சம்பவம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles