ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நான்கு நாள் பயணமாக இன்று வடக்குக்கு செல்கின்றார். அதிவிசேட பாதுகாப்புடன் அவர் இன்று பகல் யாழ்ப்பாணத்தில் வந்திறங்கவுள்ளார்.
இந்நிலையில், ஜனாதிபதியின் யாழ்.விஜயத்தின்போது எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதைத் தடுக்கக்கோரி பொலிஸார் தாக்கல் செய்திருந்த மனுவை யாழ். நீதிவான் நீதிமன்றம் நேற்று நிராகரித்துள்ளது.
சட்டத்தை மீறாத வகையில், ஜனநா யக ரீதியில் எதிர்ப்பில் ஈடுபடுவதற்கான உரிமை உள்ளது என்று நீதிமன்றம் இதன்போது அறிவித்துள்ளது.
ஜனாதிபதியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டங்கள் முன்னெடுக்கப் படுவதற்குத் தடை விதிக்கக் கோரியே யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.










