மத்திய மலைநாட்டில் 50 வீதமான பகுதிகள் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன என்று தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேற்படி பகுதிகளில் கட்டடங்கள் மற்றும் வீதி நிர்மாண பணிகளை முன்னெடுக்கும்போது அதிக கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கட்டடம் மற்றும் நிர்மாணப்பணிகளை முன்னெடுக்கும்போது தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் பரிந்துரையை பெறுவது ஏற்புடைய நடவடிக்கை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.










