ஐக்கிய மக்கள் சக்தி தலைமையில் அமையவுள்ள எதிரணி கூட்டணி தமது அணிக்கு எவ்விதத்திலும் சவாலாக அமையாது – என்று தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஷான் விஜயலால் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தமை, எதிரணி கூட்டணி என்பன தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ மேற்கண்டவாறு கூறினார்.
” குப்பை குப்பையோடுதான் சேரும். ஷான் விஜயலால், ஜி.எல்.பீரிஸ், நாலக கொடஹேவா போன்றோர் அமைச்சர்களாக, முதலமைச்சர்களாக பதவி வகித்தவர்கள். அமைச்சரவையில் இருந்தபோது பாதகமான விடயங்களுக்கு கை உயர்த்தியவர்களே இவர்கள்.
குப்பைகள் ஒரு இடத்தில் குவிவது நல்லது. அப்படியே துடைத்து எறிந்து விடலாம். குப்பைகளை துடைத்தெறிந்து நாட்டை தூய்மையாக்க நாம் தயார்.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.










