மலசலக்கூடத்துக்குள் ஒளிந்தவர் ஹெரோயினுடன் சிக்கினார்

யுக்திய தேடுதல் நடவடிக்கையின்போது, மலசலக் கூடத்துக்குள் ஒளிந்தவர் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொல்கொட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய துடுவ பகுதியில் திடீர் தேடுதல் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது நபரொருவர், பொலிஸாரிடம் இருந்து தப்ப மலசலக்கூடத்துக்குள் ஒளிந்துள்ளார்.

அவரை வெளியே அழைத்து பரிசோதித்தபோது அவர் வசம் ஹெரோயின் இருந்துள்ளது.

ஹெரோயின் தொடர்பில் குறித்த நபருக்கு ஆறு வழக்குகள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

Related Articles

Latest Articles