சம்பள உயர்வு குறித்து நாளை கலந்துரையாடல்!

மலையக பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான முக்கிய கலந்துரையாடல் நாளை (09) தொழில் அமைச்சில் இடம்பெறவுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவே இந்த கலந்துரையாடலை நடத்தவுள்ளது.

இக்குழுவில் தொழிற்சங்கங்கள், பெருந்தோட்ட நிறுவனங்கள் மற்றும் தொழிலமைச்சு ஆகியவற்றின் பிரதிநிதிகள் அங்கம் வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை பெற்றுக் கொடுக்கும் வகையில், இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. இதற்கான கோரிக்கைகள் சம்பந்தப்பட்ட பெருந்தோட்ட நிறுவனங்களிடம் ஏற்கனவே முன்வைக்கப்பட்டுள்ளன.

Related Articles

Latest Articles