பாதாள குழு உறுப்பினர்போல் நடித்து கப்பம் பெற முற்பட்ட 70 வயது நபரொருவர் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மினுவாங்கொடை மாபொதல பகுதியைச் சேர்ந்த நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நபரொருவருக்கு அழைப்பை ஏற்படுத்தி, தன்னை பாதாள குழு உறுப்பினர் என அடையாளப்படுத்திக்கொண்டு 15 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளார் எனவும், அதில் 5 லட்சம் ரூபாவை பெற்றுள்ளார் எனவும் தெரியவருகின்றது.
மினுவாங்கொடை பொலிஸ் நிலையத்தில் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டுக்கமையவே இக்கைது இடம்பெற்றுள்ளது.










